பஸ் விபத்தில் 38 பேர் சம்பவம் இடத்தில் பலி
ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று காலைபயணிகளுடன் சென்ற பஸ் சாபுல் மாகாணம் வழியாக சென்றபோதுஎதிர்திசையில் வேகமாக வந்த பெற்றோல் கொள்கலன் லொறியுடன் மோதுண்டது.
இந்த கோர விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.