விக்கியின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணியாது – ஐதேக கண்டனம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன் உத்தரவிடுவதற்கு முனையக் கூடாது என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விக்னேஸ்வரனின் அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் அடிபணியாது.
சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர் எவ்வாறு 6.2 மில்லியன் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவருக்கு உத்தரவிட முடியும்?
போருக்குப் பின்னர் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு அரசாங்கத்துக்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் செயற்பட்டுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐதேக பொதுச்செயலர் கபீர் காசிமும், விக்னேஸ்வரனின் செயற்பாடுகள், அமைதி மற்றும் இணக்கப்பாட்டுக்கு உதவியாக அமையாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.