விஷ ஊசிப் பரிசோதனை புலனாய்வாளர்களுக்கா? போராளிகளுக்கா? - அச்சத்தில் மக்கள்
விஷ ஊசி தொடர்பான விவகாரத்தினைத் தொடர்ந்து நேற்று (2) மாலை கிளிநொச்சி வைத்திய சாலையில் முன்னாள் போராளிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது வைத்தியசாலையின் உட்புறத்திலும் வெளிப்பு றத்திலும் இராணுவப்புலனாய்வாளர்களினதும் மற்றும் வேறு பல பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களினதும் நடமாட்டத்தினைத்தினால் பல முன்னாள் போராளிகள் பரிசோதனைகளை மேற்கொள்ளாது திரும்பி உள்ளனர்.
நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பலர் வசித்து வருகின்ற நிலையில் ஏழுபேர் மட்டுமே பரிசோதனைகளை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
மீண்டும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி கிளிநொச்சி வைத்திய சாலையில் மாலை நான்கு மணி முதல் ஆறுமணிவரை பரிசோதனைகள் நடைபெற இருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் புலனாய்வாளர்களை இனங்கண்டு அவர்களினை தடுப்பது வைத்திய சாலை நிர்வாகத்தினருக்கு சில வேளைகளில் அவர்களது சக்திக்கு அப்பாற்ப்பட்ட விடயமாக இருந்தாலும் அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற பரிசோதனைக்கு புலனாய்வாளர்களை வைத்தியசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்காதவாறு உரிய தரப்பினரிற்கு கடிதம் மூலம் அறிவித்து தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறுமுன்னாள் போராளிகள் கேட்டு நிற்கின்றனா்.