Breaking News

அரசியல் தலைமைகளை சந்தித்தார் ஐ.நா செயலாளர் பான் கீ மூன்



இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சபாநாயகர் கரு ஜெயசூரிய உட்பட அரசியல்த் தலைவர்கள் பலரை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இரண்டாம் நாளான இன்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். சபாநாயகர் கரு ஜெயசூரிய,பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், லக்மன் கிரியெல்ல, றிசாட் பதியுதீன், சரத் பொன்சேகா, பிரிதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், டக்ளஸ் தேவாநாந்தா ஆகியோரைச் சந்தித்திருந்தார்.

இதன்போது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த சந்திப்பினையடுத்து பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.