Breaking News

ஜனாதிபதி இன்று யாழ் விஜயம்!



யாழ்ப்பாணத்தில் புதிய பொலிஸ் நிலைய கட்டிடமொன்று இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.