சம்பூரில் காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில்சிறுமி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய ஜெஹதீஸ்வரன் அஜந்தா எனும் சிறுமியேகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி நேற்று காலை காணாமல் போயிருந்த நிலையில் சிறுமியின் பெற்றோரும், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் தேடுதல் நடவடிக்கையை மேற் கொண்ட போதே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் பாட்டியின் பராமரிப்பில் சிறுமி வாழ்ந்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.