வெட்டி ஓடப்பார்த்த மூன் -இறுக்கி பிடித்த விக்கி (காணொளி)
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் இன்றைய யாழ்விஜயத்தின்போது காலதாமதம் ஏற்பட்டது என்பதை காரணம்காட்டி முதலமைச்சருடனான சந்திப்பை தவிர்ப்பதற்கு கொழும்பிலிருந்து கிடைத்த அழுத்தம் காரணமாக நேரமிஜன்மையை காரணம் காட்டி முதலமைச்சருக்கு கைலாகு கொடுத்துவிட்டு செல்வதற்கு ஐ.நா செயலாளர் முயன்றிருப்பதை முதலமைச்சர் வெளிக்கொண்டுவந்துள்ளார்.
இந்த பின்னணியில்தான் முதல்வருடனான சந்திப்பு இல்லை என்னுடன் வந்து சந்தியுங்கள் என சம்பந்தன் முதலில் அழைப்பை விட்டார் தன்னுடன் வந்தால் சம்பந்தன் சொல்வதை எல்லாரும் பார்த்துகொண்டிருக்க சந்திப்பு பயன்படாது என்பதை முன்கூட்டியே அறிந்துகொணட முதல்வர் தனியாக சந்திப்பதற்குரிய ஒழுங்கை செய்தார்.
ஆனால் அதற்கு ஒத்துப்போன கொழும்பு ஐ.நா தூதரகம் இறுதியில் சிலரின் நெருக்குதலால் அதனை தவிர்ப்பதற்கு தீர்மானித்திருந்தது. இருந்தும் முதலமைச்சர் அதனை ஏற்றுக்கொள்ளாது சிறிதளவு நேரமேனும் பெற்று தனது உள்ளகிடக்கையை ஆவண வடிவிலும் நேரிலும் சொல்லி முடித்துள்ளார்.
இதனை விளக்கிய முதல்வர் இன்று தாம் நீண்டநேரம் காத்திருந்தபின் ஐ.நா செயலரின் உதவியாளர் இன்றைய சந்திப்புக்கு நேரமின்மை காரணமாக செயலாளருக்கு கைலாகு மட்டும் கொடுத்துவிடுங்கள் அவருடன் பேசுவதற்கு நேரம் போதாது என்ற காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. இருப்பினும் முதலமைச்சர் அதனை ஏற்றுக்கொள்ளாததால் எமக்கு 6நிமிடம் மாத்திரம் வழங்கலாம் அதற்குள் பேசி முடித்துவிடுங்கள் என நேரவரையறை வழங்கப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சிக்கல் வரும் என்பதை நான் முதலிலேயே அறிந்திருந்தேன் இதன் காரணமாக முதலிலேயே என்னென்ன விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடவேண்டும் என்பதோடு காணாமல் போனவர்களின் 4000பேர் வரையான காணாமல் போனவர்களின் முழுமையான விபரமும், இராணுவம்,கடற்படை,விமானப்படை என்பன எங்கெங்கு மக்களது காணிகளை கையகப்படுத்தியுள்ளார்கள் எவ்வளவு கையகப்படுத்தியுள்ளார்கள் என்பதும் மேலும் சர்வதேச விசாரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துடையாடியதோடு விசேட ஆவணம் ஒன்றும் ஐ.நா செயலரிடம் கையளித்திருப்பதாக முதல்வர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.