Breaking News

26 முன்னாள் போராளிகளுக்கு முதற்கட்டமாக விச ஊசி மருத்துவ பரிசோதனை



முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விசஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா மாவட்டத்தில் 3 முன்னாள் போராளிகளும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு முன்னாள் போராளியும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவில்லை.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனை இன்று கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பொது மருத்துவமனைகளிலும்,யாழ். போதனா மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.