Breaking News

பூர்வீக நிலங்களை சூறையாடப்பட இடமளிக்க கூடாது

இன்று தெரிவு செய்யபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கான மாகாண சபையின் குறித்தொகுபட்ட நிதி ஊடாக விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி விவசாயி பிராந்திய பணியகத்தில் நடைபெற்றது .

இதன் போது பிரதம விருந்தினாராக கலந்த கொண்ட மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்

இவர் இங்கு மேலும் கருத்த தெரிவிக்கும் போது யுத்திற்கு பின்னர் எங்களுடைய தமிழர் பகுதிகளில் தென்பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொழில் செய்யவருபர்கள் பலர் அவர்கள் எங்களிடம் வரும் போது நாங்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றோம் பலருக்கு மறைமுகமாக தொழில்வாய்பு இருக்கும் கூறிக்கொண்டு வருபவர்கள் எங்கள் பூர்வீக நிலங்களை சூறையாடமட்டும்தான் வருகின்றார்கள்.

எனவே நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.வெறுமனே வேலைவாய்ப்புக்கள் என்ற ஒன்றுக்காக எங்களுடைய அடுத்தடுத்த சந்ததி இந்த மண்ணில் வாழவேண்டிய பகுதிகளை அல்லது சூழலை நாங்கள எவ்வாறு பேணப்போகின்றோம் என்பதை எல்லாம் நாங்கள் கருத்தில் எடுக்கவேண்டும்

இன்று முறையான மாகாண சபை உருவாக்கப்பட்;டு இருக்கின்ற போதும் வடக்கு ஆளுநர் சில தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் இது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அண்மையில் கூட பூநகரிப்பகுதியில் ஒர் உல்லாச விடுதி கட்டுவதற்கு பூநகரி பிரதேச சபைக்கு அனுமதி வழங்குமாறு நேரடியாக பணித்திருக்கின்றார்.

இவ்வற்றை நாங்கள் எதிர்க்கின்ற போது நாங்கள் அபிவிருத்தி எதிரானவர்கள் என்ற நாமம் எம்மீது சூட்டப்படுகின்றது நாங்கள் அனுமதி மறுக்கும் போது தேவையற்ற விதத்தில் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள்.

நீங்கள் விவசாயிகள் சொந்தக்காலில் நின்று தொழில் செய்பவர்கள் எல்லோருக்கும் சோறு போடக்கூடியவர்கள் யுத்தத்தினால் அல்லது நட்டம் அடைந்தன் காராணமாக இன்று விவசாய நிலங்கள் வெற்றிடங்களாக இருக்கின்றன இந்த நிலங்கள் பலரது கண்ணுக்கும் குத்துகின்றது இவற்றை ஏதோ ஒரு வகையில் அபகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் வந்து முயற்சிக்கின்றார்கள்.

எனவே எங்களுடைய விவசாய நிலங்களை கைவிடுவீர்களாக இருந்தால் நீங்கள் ஏதோ ஒரு தொழிற்சாலைகளில் கூலிக்கு வேலை செய்பவர்களாக மாறிவிடுவீர்கள் ஆகவே நீங்கள் கூலித்தொழிளாலர்களாக மாறக்கூடாது என்பதில் நாங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றோம் அதனால்த்தான் சும்மார் 10 மில்லியன் ருபாய் பெறுமதியான விவாசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்களை உங்களுக்கு தருகின்றோம்.

அபிவிருத்தி என்ற போர்வையில் எங்களுடைய வளங்களை சூறையாடி விட்டு போவதற்கு யாருக்கும் நாங்கள் இடமளிக்க கூடாது. நாங்கள் காலம் காலமாக வாழ்ந்த இந்த மண்ணில் எங்களுடைய அடுத்த தலைமுறையும் பயனை அனுபவிக்க வேண்டும் அதற்காவது நாங்கள் எங்களுடைய விளை நிலங்களை வெறுமையாக விடாது பயனதரக்கூடிய விவசாய உற்பத்திகளை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாய பெருமக்கள்எனப்பலர்கலந்து கொண்டனர்.