செல்வம் அடைக்கலநாதனை எச்சரித்தாரா இளஞ்செழியன்?
போதைப் பொருள் அச்சுறுத்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல்மட்டத் தலைவர் ஒருவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இக்குறித்த நபர் கேரளக் கஞ்சா விநியோகம் செய்யும் குழுவினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அவரையும் கைதுசெய்யக்கூடும்.
யாழ்ப்பாண நகரம், சட்டத்துக்குக் கீழ்ப்படியும் அறிவார்ந்த தமிழ்ப் பாரம்பரியத்தைக் கொண்ட தும் பெரும்பான்மையாக தமிழ் மக்களைக் கொண்டதுமான நகரமாகும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலும்கூட அதன் கட்டுக்கோப்பு குலையவில்லை.
யுத்தம் நிறைவடைந்து இன்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இங்கு ஆயுத தாரிகளாலும், உட்பகைக் கும்பல்களாலும், பாலியல் வல்லுறவுகள், பெண்களைக் கேலி செய்தல், மதுவுக்கு அடிமையாதல், போதைவஸ்து பயன்பாடு போன்றவை தற்போது தலைதூக்கியுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களில் வரும் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட சில கும்பல்கள், துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள் சகிதம் உருந்துருளிகளில் சென்று வீடுகளை உடைத்தல், சங்கிலிகள் அறுத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் போதைவஸ்து மற்றும் மதுபானத்துக்கு அடிமையாகின்றனர். இதனால் பல இளம் குற்றவாளிகள் உருவாகினர்.
இதற்கெல்லாம் காரணம் வடக்கில் நிலைகொண்டுள்ள 1,50,000 ஆயிரம் படைகளே என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். அத்துடன் அவர்களே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்றனர் எனவும் குற்றம் சுமத்தினார். அத்துடன் இக்குழுக்களையெல்லாம் இராணுவத்தினரே வழிநடாத்துகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியதோடு, வடக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றவேண்டுமெனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றார்.
ஆனால், அதிகமான தமிழ் மக்கள் வெளியாரின் வருகையே இதற்குக் காரணம் என அவர்கள் மீது பழியைப் போடுகின்றனர். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான தண்டனைகள் வழங்கத் தீர்மானித்தார். இதற்கமைய குற்றங்களைப் பொறுத்து அவர் தண்டனைகளை தீர்மானித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
மாலைவேளைகளில் வீதிகளில் விசேட அதிரடிப்படையினரை ரோந்தில் ஈடுபடுத்துவதற்காக தனது சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தினார். இதற்கு பல தமிழ் தலைமைகள் கிழக்கு மாகாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர்கள் இவர்கள் என பல தமிழ்த் தலைவர்கள் தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தனர். அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக ஐந்து அல்லது ஐந்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடினால் அவர்களை கைதுசெய்யும்படியும் உத்தரவிட்டார்.
அடுத்ததாக, உள்ளூர் நீதித் துறையின் பலவீனத்தைத் திருத்துவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளிக்காததோடு, தொடர்ச்சியாக பிணையைத் தள்ளுபடி செய்துவந்தார்.
மேலும் சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், போதைப் பொருள் அச்சுறுத்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல்மட்டத் தலைவர் ஒருவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இக்குறித்த நபர் கேரளக் கஞ்சா விநியோகம் செய்யும் குழுவினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அவரையும் கைதுசெய்யக்கூடும்.
அந்த முக்கிய தமிழ் அரசியல்வாதி செல்வம் அடைக்கலநாதனாக இருக்கலாம் என்றே பரவலாக நம்பப்படுகிறது.