கவனிப்பாரற்ற நிலையில் மாஞ்சோலை மருத்துவமனை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு குறைகளை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லையென சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் குடிநீர் கலன்களில் குரங்குகள் அட்டகாசத்தால் நீர் அசுத்தமடையக்கூடிய நிலை இருப்பதாகவும் குரங்குகள் வந்து நிற்கும் வேளையில் அங்கு பல ஊளியர்கள் இருந்தும் அவற்றை கலைப்பதில்லை எனவும்வைத்திய சாலைக்குள்ளேயே நீர் தேங்கி நின்று நுளம்பு பெருகக் கூடிய நிலையிருந்தும் அவற்றை கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளதாகவும்வைத்திய சாலையினுடைய நுளைவுப்பகுதியில் போடப்பட்டுள்ள லேவல் சீட் எப்போதும் நோயாளர்களின் தலையில் விளலாம் என்ற நிலையில் காணப்படுவதாகவும் கால்நடைகள் வைத்திய சாலை வளாகத்திற்குள் நடமாடி திரிவதாகவும் பல ஊளியர்கள் கடமையிலிருந்தும் இவற்றை கண்டுகொள்ளாமையும் மிகவும் சுத்தமான இடமாக காணப்படவேண்டிய வைத்தியசாலை வளாகம் இவ்வாறு காணப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளதோடு,
இந்த வைத்தியசாலையினை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.








