Breaking News

கம்போடியாவில் குடியமரும் ஈழ அகதிகள்



சட்டவிரோதமான முறையில் அவுஸ்தி ரேலியாவிற்கு சென்ற ஈழ அகதிகள் கம்போடியாவில் குடியமர்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்களை திருப்பி அனுப்புவதனால் இந்த அகதிகள் கம்போடியாவில் தஞ்சமடைய முடிவுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு தடுப்பு முகாமில் உள்ள இரண்டு இலங்கை அகதிகளும் ஒரு சிரிய அகதியும் கம்போடியாவில் குடியமர திடீரென சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவில் குடியமர சம்மதம் தெரிவித்துள்ள ஈழ அகதிகள் மற்றும் சிரியாவைச் சேர்ந்த மூன்று அகதிகளுக்கு 15,000 டொலர்களை அவுஸ்திரேலியா அரசு கொடுப்பதாக Refugee Action Coalition அமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.