ஜனாதிபதியின் இரகசியங்களை ஒட்டு கேட்கும் மஹிந்த
முன்னைய குடும்ப ஆட்சியில் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் இரகசியமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக் ஷவை சென்றடைந்து விடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு இரகசியங்களை ஒருசிலர் மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் ஒருசிலர் குற்றவாளிகளுக்கு எதிராக ஏதேனும் நகர்வுகளை எடுக்கும் போது அதை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து விடுகின்றனர்.
அதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்புடைய விவகாரம் தொடர்பில் இன்னும் அரசாங்கம் வாய்திறக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு டுபாய் வங்கிக் கணக்குகளில் யார்? யார் நிதியை பதுக்கி வைத்து ள்ளனர் என்ற விபரத்தை பெறுவதற்கு அனுமதி பெற்றார்.
ஆனால் அவர் அவ்வாறு செயற் பட்டு ஒருமணி நேரத்தில் மஹிந்தராஜபக் ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.








