Breaking News

பிரதி அவைத்தலைவர் தெரிவை இடைநிறுத்தி வைக்கப் பணிப்பு

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்குரிய வரை தெரிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவைத்தலைவர் சீ. வீ.கே.சிவஞானத்திற்கு கடிதம் மூலம் அறிவிப்பு செய்துள்ளார். எனினும் முதலமைச்சர் நாட்டில் இல்லாத சந் தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதி அவைத் தலைவர் பதவியை வழங்கும் நடவடிக்கைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது.

முதலாவது வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக தமிழரசு கட்சியை சேர்ந்த முல்லைத் தீவு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் அன்ரனி ஜெயநாதன் தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக பதவியிலிருந்து வந்தார். மூன்று வருடங்களாக அவர் பிரதி அவைத் தலைவர் பதவி வகித்த போதிலும் ஒருமுறையே சபை நடத்தும் சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் மாரடைப்பு காரணமாக பிரதி அவைத்தலைவர் உயிரிழந்ததனை அடுத்து அந்த பதவி வெற்றிடமாகியது. அந்த பதவியை பெறுவதற்கான போட்டிகளும் அதிகரித்தன. எனினும் அன்ரனி ஜெயநாதன் தமிழரசு கட்சியை சேர்த்தவர் என்பதனால் அந்த பதவியை தமிழரசு கட் சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியினர் கோரி வருகின்றனர். அதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவருடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது.

அவசர அவசரமாக நடைபெற்ற இந்த முயற்சிகளுக்கு சக உறுப்பினர்கள் நாளை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வின் போது ஆதரவு வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டோரால் கோரிக்கை விடு க்கப்பட்டது. எனினும் அதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கூட, நாளை இடம்பெற வுள்ள மாகாண சபையின் அமர்வில் பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் தான் நாடு திரும்பும் வரையில் பிரதி அவைத்தலை வரை தெரிவு செய்ய வேண்டாம் என அவைத் தலைவர் மற்றும் பதில் முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவிப்பு செய்துள்ளார். எனினும் நாளை இடம்பெறவுள்ள மாகாண சபையின் நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சரின் உத்தரவினை மீறியும் பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்வது குறிப்பிடப் பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.