கொழும்பில் ஆரம்பமான பாத யாத்திரை யாழில் நிறைவு
இலங்கைக்கான ஜப்பான் தூதரகம், மற்றும் சர்வமத அமைப்புக்களின் ஏற்பாட்டில் நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் வகையில் கொழும்பில் ஆரம்பமான சமாதான பாதயாத்திரை யாழை சென்றடைந்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி கொழும்பில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரை இன்று (28) காலை யாழ். நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஆலய முன்றலில் நிறைவுபெற்றது.
ஜப்பான் நாட்டின் சர்வமதங்களில் இணைத்தலைவர் ரெங் கியோ தலைமையிலான பத்து பேரடங்கிய குழுவினர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்








