Breaking News

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வழங்கப்படும் – டெனீஸ்வரன்!



வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், நேற்று முன்தினம் ஆரம்பமான வடக்கு மாகாண கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது விடிவிற்காக உயிர்த்தியாகங்கள் செய்தவர்களை மறந்துவிடக்கூடாது எனத் தெரிவித்த டெனீஸ்வரன், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான உதவித்திட்டங்கள் குறித்து முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்களினது விபரங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கோரியுள்ள நிலையில், இவர்கள் அனைவருக்கும் மேலதிக உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.