Breaking News

ரவிராஜ் கொலை: ஜூரி சபை முன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு



2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை ஜூரி சபை முன் நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி மணிலால் விஜேதிலக்க இன்று அனுமதி வழங்கினார்.

இந்த கொலை வழக்கில் இரண்டு கடற்படையினர், ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா தரப்பை சேர்ந்த மூன்று பேர் என ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜூரி சபை சபை முன் விசாரணை நடாத்த முடியாது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்,குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஜூரி சபை முன் நிறுத்தி விசாரணைகள் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.