Breaking News

சர்ச்சைக்கு தீர்வு : ஜனாதிபதியும் பிரதமரும் மனம் விட்டு பேச்சு; ஐ.தே.க. அறிவிப்பு

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் காணப்­பட்ட புரிந்­து­ணர்­வற்ற தன்மை முடி­வுக்கு வந்து விட்­டது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பேச்­சு­வார்த்தை நடத்தி தெளி­வற்ற விடயங்களை தெளிவு­ப­டுத்திக் கொண்­டனர். தற்­போது தேசிய அர­சாங்கம் மேலும் பல­மா­கி­யுள்­ளது என்று ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தி­ருக்­கி­றது.


ஜனா­தி­ப­தியின் கூற்­றினால் தேசிய அர­சாங்­கத்­திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டாது. ஜனா­தி­ப­தியின் கூற்­றி­னை­ய­டுத்து உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றாக அமர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கண்டு விட்­டனர் எனவும் ஐக்­கிய தேசியக் கட்சி சுட்­டி­க்காட்­டி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில்  வெளியிட்ட கருத்­துக்கள் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அஜித் பி பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கு­மி­டையில் ஒரு சில இடங்­களில் தவ­றான புரிந்­து­ணர்­வுகள் காணப்­பட்டு வந்­தன. அதா­வது புரிந்­து­ணர்­வற்ற தன்மை காணப்­பட்­டது என்று கூறலாம். அவ்­வா­றான சூழ­லி­லேயே ஜனா­தி­பதி இது போன்ற உரை­யினை நிகழ்த்­தினார்.

இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் உரையின் பின்னர் இது தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றாக அமர்ந்து இந்த புரிந்­து­ணர்­வற்ற நிலை­மைகள் தொடர்­பாக மிகவும் விரி­வாக கலந்­து­ரை­யா­டினர். அத­னூ­டாக இரண்டு தரப்­புக்­கு­மி­டையில் காணப்­பட்ட அனைத்து புரிந்­து­ணர்­வற்ற தன்­மைக்கும் தீர்வு காணப்­பட்­டது.

அத­வாது முன்பு இருந்­ததை விட தேசிய அர­சாங்கம் தற்­போது மிகவும் பல­மாக இருக்­கின்­றது. இரண்டு தரப்­புக்­கு­மி­டையில் நில­வி­வந்த அனைத்து புரிந்­து­ணர்­வற்ற தன்­மைக்கும் தீர்­வு­கா­ணப்­பட்­டது. குறிப்­பாக தேசிய அர­சாங்­க­மா­னது முன்பு இருந்­த­தை­விட பல­மா­கி­விட்­டது என்றே கூறலாம்.

ஜனா­தி­ப­தியின் கூற்­றா­னது எக்­கா­ரணம் கொண்டும் தேசிய அர­சாங்­கத்­துக்கு அச்­சு­றுத்தல் அல்ல. அத­னூ­டாக தேசிய அர­சாங்கம் மேலுமு் வலு­வ­டைந்­துள்­ளது.

கேள்வி- அப்­ப­டி­யாயின் தேசிய அர­சாங்­கத்­துக்குள் புரிந்­து­ணர்­வற்ற தன்மை காணப்­பட்­டதா?

பதில் -ஆம். தேசிய அர­சாங்­கத்­துக்குள் புரிந்­து­ணர்­வற்ற தன்மை காணப்­பட்­டதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி அவ்­வா­றான கருத்தை வெ ளியிட்டார். ஆனால் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடத்தி அனைத்துக்கும் தீர்வு கண்டுவிட்டனர்.

கேள்வி - எதிர்வரும் நிலைமைகளை ஆராய இரண்டு கட்சிகளிலிருந்தும் குழு நியமிக்கப்பட்டுள்ளதா?

பதில்- அது எதிர்கால கொள்கைகளைமுன்னெடுக்க நிறுவப்பட்டுள்ளது.