Breaking News

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குறித்த சந்தேகநபரை தர்மபுரம் பொலிஸார் இன்று பகல் கைது செய்து செய்துள்ளனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் நேற்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. 

இந்நிலையில் வேறு பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சி பிரதேசத்திற்கு வருகை தந்த வாகனங்கள் மற்றும் பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலை உருவாகியதாக எமது செய்தியாளர் கூறினார். 

இதன்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்திருந்தார்.