ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கு உள்ளது – கோட்டாபய
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் முழுமையாக ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றால்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தாம் களமிறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சகோதர மொழி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசியலில் பிரவேசிப்பது குறித்து தாம் இதுவரை இறுதி தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மக்களுக்காக சேவை செய்வதற்கு அடுத்தகட்ட யோசனை தொடர்பில் சிந்தித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.