தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாண அணி 254 பதங்கங்களை பெற்று முதலிடத்தில்
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாண அணி 254 பதக்கங்களை பெற்று ஜனாதிபதி வீரமுதன்மை பட்டத்துடன் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் 42 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்து வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்திருந்தார்.
மேலும் இந் நிகழ்வில் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற விளையாட்டு விழாக்களில் மேல் மாகாண அணி 113 தங்கம்இ 74 வெள்ளிஇ 67 வெண்கலம் மொத்தமாக 254 பதக்கங்களை பெற்று முதல் இடத்தினை பெற்றது.
தென்மாகாணம் 33 தங்கம் இ 29 வெள்ளிஇ 43 வெண்கலம் மொத்தமாக 105 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றது.
மத்திய மாகாணம் 28 தங்கம்இ 38 வெள்ளிஇ 41 வெண்கலம் மொத்தமாக 107 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதேவேளை புதிய சாதனைகளை படைத்த வீரர்களுக்கு காசோலைகளும் பரிசாக வழங்கப்பட்டன.