வடக்கு முதல்வருக்கு எதிராக முறைப்பாடு
வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெற்கில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும், இனவாதத்தை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டி, ‘சிங்கலே’ எனும் இனவாத அமைப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
அமைப்பின் தலைவர் அஹூலுகல்லே ஸ்ரீ ஜீனாநந்த தேரரால் நேற்று (திங்கட்கிழமை) குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் சட்டத்தின் பிரகாரம் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிங்கலே அமைப்பு தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழில் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ எனும் பேரணிக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டில் பிரிவனைவாதத்தை தோற்றுவிப்பதாக, தென்னிலங்கை இனவாதிகள் தொடர்ந்தும் பிரசாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.