Breaking News

விஷ ஊசி விவகாரம் - பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்



விஷ ஊசி தொடர்பான பரிசோதனையில் முன்னாள் போராளிகள் பெருமளவில் ஆர்வம் காட்டாத நிலையே காணப்படுவதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் போராளிகள் மர்மமாக உயிரிழந்துவரும் நிலையில், அவர்களுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டிருந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் வட மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனையில் இதுவரை 185 வரையான முன்னாள் போராளிகளே பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவான முன்னாள் போராளிகளே வருகை தந்திருந்ததாக வட மாகாண சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்து வருவதோடு, உடல் ரீதியிலும் வலுவிழந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புனர்வாழ்வின்போது அவர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும் அதனாலேயே இப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பல சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.