தமிழ் மக்களின் பரம்பரைக் காணிகள் விகாரைக்கென சுவீகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் செம்பிமலை, வடழிக்குளம் மற்றும் திரியாய் போன்ற பிரதேசங்களில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகள் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கென புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
காணி அபகரிப்பு சட்டத்தின் ஒழுங்கு விதிகள் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிறுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்திக்கென கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளில் 75 வீதமானவைகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.