வடக்கு-கிழக்கு மாணவர்கள் சாதனை
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாணவர்கள் தேசிய ரீதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்றிரவு வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, மாத்தறை மெதடிஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, சிதிஜா நிரான் சமரவிக்ரம 196 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்திலும், மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுகொண்டார்.
அத்துடன், குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலும் ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவியும் 195 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளார். அதேபோல், திருகோணமலையைச் சேர்ந்த மாணவண் உதயராஜன் கௌசிகன் 194 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த கேதீசன் துஷானன் மற்றும் ஜோன் பொஸ்கோ பாடசாலையை சேர்ந்த கிளமென்ற் லின்ரன் விஜயக்குமார் பற்றிக் ஆகிய இருவரும் 191 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.