Breaking News

புலிகளின் அரசியல் தீர்மானங்களை விமர்சித்த சுமந்திரனுக்கு யாழில் எதிர்ப்பு



தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அரசியல் தீர்மானங்களை விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடம் ஏற்றியதாலேயே இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்கள் பேரழிவை சந்தித்ததாகவும் குறிப்பிட்ட அவர்,எனினும் அதன் ஊடாக கற்றுக்கொண்ட அனுபவங்களை இன்னமும் சிலர் கற்றுக்கொள்ளாது மீண்டும் தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் தெரிவித்தார். 

எனினும் தமிழ் மக்கள் அவர்களை முற்றாக நிராகரித்துள்ளதாகவும் சுமந்திரன் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றயாழ் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரான மு. திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு, டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை என்ற நூல் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.