நல்லாட்சியிலும் படையினரின் அச்சுறுத்தல் தொடர்கின்றது - ஹக்கீம்
நல்லாட்சி அரசாங்கத்தில் படையினரின் அச்சுறுத்தலால் பெண்கள் மலசலகூடம் செல்வதற்கு கூட முடியாத நிலைமை காணப்படுவதாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் படையினரின் வசமுள்ள காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு காட்டப்படுகின்ற தீவிரம் கிழக்கு மாகாணத்தில் காட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி சுவீகரிக்கும் போது நட்டஈடு வழங்குவது தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.








