Breaking News

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதி..!!

வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திகழ்வதால் தமது கட்சியை முடக்கும் திரைமறைவுச் சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


நேற்று (27) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தலைமையகத்தில் மாலை 06.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு விடுதலைப் போரில் உயிர்நீர்த்த அனைவருக்குமாக அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னரான உரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவரது உரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகுந்த நெருக்கடிகளுக்குள் உள்ளாகிவருவதாகக் குறிப்பிட்ட அவர் இம்முறை விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களை மட்டும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினால் முன்னணி உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவ்வாறான சூழல் ஏற்பட்டால் இவர்கள் கொண்டுவர விரும்பும் ஒற்றையாட்சி தீர்வை எதிர்க்க எவரும் இருக்கமாட்டார்கள் என கட்சி உறுப்பினர்கள் விவாதித்ததாகவும் அதன் அடிப்படையில் விடுதலைப் போரில் தங்கள் இந்னுயிர்களை ஈந்த அனைவருக்குமான பொது நினைவேந்தலாக இத் தினத்தை அனுஸ்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.