Breaking News

11 யாழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்ததில் சட்டத்திற்கு முரணான வகையில் 11 இளைஞர்கள் கைதுசெய்யப்ப ட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆவாக குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தியே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில், தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என உறவினர்கள் தெரவித்துள்ளனர்.