நிலைமாறுகால நீதி, நல்லிணக்கத் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் நிலைமாறுகால நீதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரிவு, நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நிலைமாறுகால நீதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் ஆர்வமுள்ள அமைப்புகள், நிதி உதவிக்காக விண்ணப்பம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நிலைமாறு கால செயல்முறை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்தும், 1-2 வரையான திட்டங்களுக்கே இந்த 1.7 மில்லியன் டொலர் நிதியை அமெரிக்க வழங்கவுள்ளது.