Breaking News

வவுனியாவில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களுக்கு அஞ்சலி

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலத்தில் இன்று சுனாமி பேரலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.


நரசிங்கர் ஆலயத்தின் பரிபாலனசபையின் உறுப்பினர் கோ. ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற நினைவு தினத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே. கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், செ. மயூரன், பிரதேச செயலாளர் கா. உதயராசா, நகரசபை செயலாளர் தயாபரன் உட்பட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.