Breaking News

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. 

இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.