Breaking News

இலங்­கையை தடுக்க வேண்டும் : பிர­த­ம­ர் மோடியிடம் கோரிக்கை.!



இலங்கை அரசின் புதிய சட்­டத்தை நிறை­வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செய­லாளர் வைகோ பிர­தமர் மோடியை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செய­லாளர் வைகோ, பிர­தமர் நரேந்­திர மோடியை நேற்று டில்லி பாரா­ளு­மன்­றத்தில் உள்ள பிர­தமர் அலு­வல­கத்தில் சந்­தித்தார்.

இதன் பின்னர் இது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் வைகோ கூறு­கையில், 

பிர­த­ம­ரிடம் மூன்று முக்­கிய கோரிக்­கை­களை எடுத்­து­ரைத்­துள்ளேன். அதா­வது தமி­ழ­கத்­துக்கு 'வர்தா' நிவா­ரண நிதி அதிகம் அளித்­திட வேண்டும், காட்­சிப்­ப­டுத்­தக்­கூ­டாத விலங்­கு­களின் பட்­டி­யலில் இருந்து காளை மாடு­களை அகற்ற வேண்டும் மற்றும் இலங்கை அரசின் புதிய சட்­டத்தை நிறை­

வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்­ப­தாகும். 

தமி­ழக மீன­வர்கள் இந்­தியக் கடல் பரப்­பிலும், பன்­னாட்டுக் கடல் பரப்­பிலும் மீன் பிடித்­தாலும், எல்லை தாண்டி வந்­த­தாகக் கூறி, இலங்கை கடற்­ப­டை­யினர் அவர்­களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறையில் அடைக்­கின்­றார்கள். பட­கு­க­ளையும் பறி­முதல் செய்து கொண்டு போகின்­றார்கள்.

மேலும், இலங்கை அரசின் புதிய சட்­டத்தை நிறை­வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் இலங்கை அரசு ஒரு புதிய சட்­டத்தை, 2017 ஜன­வரி மாதம் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற இருக்­கின்­றது. அதன்­படி, தமி­ழக மீன­வர்கள் மீது ஏழு இலட்சம் முதல் ஏழு கோடி ரூபா­வ­ரை­யிலும் அப­ராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்து இருப்­பது, உல­கத்தில் வேறு எந்த நாட்­டிலும் நடக்­காத கொடுமை.

எனவே, நீங்கள் தூத­ரக உற­வுகள் மூல­மாக இலங்கை அர­சுக்குக் கடும் அழுத்­தத்தைக் கொடுத்து, இந்தச் சட்டம் நிறை­வேற விடாமல் தடுக்க வேண்டும் என்று மோடியிடம் கூறினேன். இதுகுறித்து வெளியுறவுத்துறையோடு ஆலோசிப்பதாக மோடி கூறினார்'' என வைகோ தெரிவித்தார்.