Breaking News

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்-அரசியல் தீப்பொறி! செ.சிறிதரன்

2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள்
பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது.

அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் பல காரியங்களை வெற்றிகரமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகியிருக்கின்றது என்றே கூற வேண்டியிருக்கின்றது.

அடுத்து என்ன நடக்கப் போகின்­றது என்ற ஒரு முக்­கி­ய­மான சிக்கல் நிறைந்த கேள்­வி­யு­ட­னேயே புதிய ஆண்­டா­கிய 2017 ஆம் ஆண்டு பிறக்­க­வுள்­ளது. புதிய ஆண்டின் முதல் நட­வ­டிக்­கை­யாக நல்­லி­ணக்க வாரம் அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

நாட்டின் சமா­தானம், ஐக்­கியம், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடான ஓர் அர­சியல் தீர்வு, பொறுப்பு கூறும் செயற்­பாட்டில் மேலும் காலம் தாழ்த்­தப்­ப­டுமா என்ற சந்­தேகம் ஆகிய பல்­வேறு முக்­கிய விட­யங்­களில் முரண்­பா­டான நிலைப்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே 2016 ஆம் ஆண்டு விடை­பெ­று­கின்­றது. இந்த நிலையில் தான் அடுத்­தது என்ன என்ற கேள்வி தொக்கி நிற்­கின்­றது.

ஜன­வரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நாட்டு மக்கள் மத்­தியில் சமா­தானம், ஒற்­றுமை, சகோ­த­ரத்­து­வத்தை மேம்­ப­டுத்­து­கின்ற ஒரு நோக்­கத்தைக் கொண்­ட­தாக இந்த நல்­லி­ணக்க வாரம் அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும் என்று அர­சாங்கம் கூறி­யி­ருக்­கின்­றது.

ஜன­வரி 8 ஆம் திகதி என்­பது நாட்டில் எதேச்­ச­தி­கா­ரத்­துக்கு முடி­வு­கட்டி, நல்­லாட்­சிக்கு வித்­திட்ட நாளாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய ஜனா­தி­ப­தி­யாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தெரிவு செய்­யப்­பட்ட நாளாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. அவர் ஜனா­தி­பதி பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்ற நாளி­லேயே தேசிய நல்­லி­ணக்க வாரத்தை அனுஷ்­டிப்­ப­தற்­கான திக­தி­யாகக் குறிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த ஒரு வருட காலத்தில் பல முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அர­சாங்கத் தரப்­பினர் கூறு­கின்­றனர்.

அதனை ஆமோ­திப்­பது போன்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் புதிய ஆண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற தமது அசைக்க முடி­யாத நம்­பிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அத்­துடன் பொறுமை காத்து அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் அவர் மீண்டும் முன்­வைத்­துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்த அவ­ரிடம் அது சம்­பந்­த­மாக அர­சி­யலில் குறிப்­பி­டத்­தக்க வகையில் மாற்­றங்கள் நிக­ழ­வில்­லையே என சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ஆயினும் அதனை அவர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

2016 ஆம் ஆண்டில் மாற்­றங்கள் நிக­ழ­வில்லை என்று கூற முடி­யாது. முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. பாரா­ளு­மன்றம் அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. புதிய அர­சியல் சாச­னத்தை இயற்­று­வ­தற்­கான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அர­சியல் சாசன சபையால் வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் வழி­ந­டத்தல் குழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 45 தட­வைகள் கூடி விட­யங்­களை ஆராய்ந்த வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சில கார­ணங்­க­ளுக்­காக அந்தக் கருமம் தாம­த­மா­கி­யுள்­ளது. எவ்­வா­றா­யினும் இன்னும் சொற்ப காலத்தில் அந்த விட­யங்கள் முறை­யாக நடை­பெற்று அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

ஜன­வரி 9, 10, 11 ஆம் திக­தி­களில் விவா­தங்­களும் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்­ளன. ஆனால் நான் கூறிய கணிப்பின் பிர­காரம் கரு­மங்கள் நடை­பெ­று­வ­தற்கு சில தாம­தங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. அந்தக் கரு­மங்கள் விரைவில் நடை­பெற வேண்டும். அதற்­காக அனை­வரும் இணைந்து பணி­யாற்ற வேண்டும் என்று இரா.சம்­பந்தன் இந்த வருட இறு­தியில் காணப்­ப­டு­கின்ற நிலை­மைகள் குறித்து கோடி காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஆயினும் அதே­வேளை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன் ஆகிய இரு­வரும் பிறக்­கின்ற புதிய ஆண்டின் தொடக்க நிலையில் அர­சியல் ரீதி­யான நிலை­மை­களில் நம்­பிக்­கை­யற்ற நிலை­யிலும் எச்­ச­ரிக்கை விடுக்கும் பாணி­யிலும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். இதனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்­குள்­ளேயே - கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்கள் முரண்­பா­டான நிலை­மையில் இருப்­பதைக் காண முடி­கின்­றது.

அர­சியல் தீர்வு விட­யத்தில் ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்கள் விரும்­பு­கின்ற ஓர் அர்த்­த­முள்ள அதி­காரப் பர­வ­லாக்கல் இடம்­பெற வேண்டும். ஒற்­றை­யாட்சி முறை நீக்­கப்­பட வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வைத்­துள்ள கோரிக்­கையை அர­சாங்­கமும், அதனைச் சார்ந்த அர­சியல் தரப்­பி­னரும் முற்­றாக நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றனர்.

குறிப்­பாக ஒற்­றை­யாட்­சியில் எந்தக் கார­ணத்தைக் கொண்டும் மாற்றம் ஏற்­ப­ட­மாட்­டாது. மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்க மாட்டோம் என்று அர­சியல் தீர்­வுக்கு மலை­போல தமிழர் தரப்பு நம்­பிக்கை வைத்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.

இதனால் சீற்றம் கொண்ட நிலையில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி. ஒற்­றை­யாட்சி முறையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஒற்­றை­யாட்சி என்றால் நாடு பிள­வு­படும் என்று எச்­ச­ரிக்கை செய்­துள்ளார். அதே­வேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அர­சாங்­கத்­திற்குக் காலக்­கெடு குறித்து எச்­ச­ரிக்கை விடுக்கும் தொனியில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

நல்­லி­ணக்க வாரம் அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் அறி­விப்­பா­னது, எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தானாக முன்­வந்து ஒப்­புக்­கொண்டு இணக்­க­ம­ளித்­துள்ள பொறுப்­புக்­கூறல் விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தைக் கோரு­வ­தற்­கான ஒரு முன்­னெ­டுப்­பாக வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்று அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறு­வ­தற்­கான காலக்­கெடு எதிர்­வரும் மார்ச் மாதத்­துடன் முடி­வ­டை­ய­வுள்­ளது. ஆயினும் அந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் இன்னும் திருப்­தி­ய­ளிக்­கத்­தக்க வகையில் முன்­னெ­டுக்­க­வில்லை. எனவே, இந்தக் காலக்­கெ­டுவை மேலும் நீடிக்கச் செய்­வ­தற்­கான ஒர் உத்­தி­யாக இந்த அறி­வித்­தலை அர­சாங்கம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது என்­பது அவர்­களின் கருத்­தாகும்.

ஆனால் அதே­வேளை. கைதிகள் விடு­தலை, நிலங்கள் விடு­விப்பு, வடக்கில் இரா­ணு­வத்தை குறைத்தல், காணாமல் போயுள்­ள­வர்கள் பற்­றிய விட­யத்­திற்குப் பொறுப்பு கூறுதல் போன்ற விட­யங்­களில் அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. நல்­லி­ணக்கம், ஐக்­கியம், சமா­தானம் என்­ப­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் பேரு­தவி புரிந்­தி­ருக்கும்.

இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும், எனவே உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதைக் கைவிட்டு விட்டு, நல்­லி­ணக்­கத்­திற்­கான வாரம் அனுஷ்­டிக்க வேண்டும் என்று நிலை­மை­களை திசை திருப்­பு­கின்ற போக்கில் அர­சாங்கம் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது என்று அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

இதே கருத்தை ஒட்­டி­ய­தா­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனின் கருத்­துக்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பெப்­ர­வரி மாத நடுப்­ப­கு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள அமர்வில் இலங்கை அர­சாங்கம் மேலும் கால அவ­காசம் தேவை என கோர இருப்­பதைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மனித உரிமைப் பேர­வையின் அமர்­வுகள் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­ன­தாக மீள்­கு­டி­யேற்றப் பணி­களை நிறை­வுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்­றுதல், பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு முறை­யான வாழ்­வா­தா­ரத்­தினை வழங்­குதல் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்­குதல் போன்ற நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் செய்ய வேண்டும். இல்­லையேல் நாங்கள் வித்­தி­யா­ச­மாக செயற்­பட வேண்­டி­யி­ருக்கும் என்று அவர் எச்­ச­ரிக்கை தொனியில் தெரி­வித்­துள்ளார்.

'எமக்கு மேலும் கால­அ­வ­காசம் தாருங்கள் என ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் விண்­ணப்­பிக்க வேண்­டிய தேவை தற்­போது அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை நாம் உணர்­கின்றோம். ஆயினும் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க பணிகள் சரி­யாக நடக்க வேண்டும். குறிப்­பாக தாம­த­மின்றி வரை­வுகள் வெளி­யாகி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்ற வரை­யி­லான செயற்­பா­டுகள் பெப்­ர­வரி மாத­ம­ள­விலே வர வேண்டும். அவ்­வாறு வரு­மா­க­வி­ருந்தால் ஐ.நா. சபையில் மேலும் அவ­காசம் கோரு­கின்ற விண்­ணப்­பத்தை முன்­வைப்­பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் செய்­யப்­ப­டு­கின்ற அதே­வே­ளையில், மற்­றைய சில விட­யங்­களை முன்­னெ­டுப்­பது அர­சாங்­கத்­திற்கு அசௌ­க­ரி­ய­மா­க­வி­ருக்கும். அவற்றை முன்­னெ­டுக்க முடி­யா­மலும் இருக்­கலாம். ஆனால் கைதிகள் விடு­தலை, நிலங்கள் விடு­விப்பு, வடக்கில் இரா­ணு­வத்தை குறைத்தல், மீள்­கு­டி­யேற்றப் பணி­களை நிறை­வுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்­றுதல், பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு முறை­யான வாழ்­வா­தா­ரத்­தினை வழங்­குதல் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்­குதல் போன்ற உட­ன­டி­யாகச் செய்­யக்­கூ­டிய விட­யங்­களை அர­சாங்கம் காலம் தாழ்த்­திக்­கொண்­டி­ருக்­காது மேற்­கொள்ள முடியும்.

ஆகவே பெப்­ர­வரி நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தி­யினுள் அர­சாங்கம் ஆகக்­கு­றைந்­தது இந்த விட­யங்­க­ளி­லா­வது முற்­போக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு சட்ட உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை ஏற்­றுக்­கொண்டு வரை­வுகள் வெளி­யா­க­வேண்டும்.

அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் மாத்­தி­ரமே அர­சாங்­கத்­திற்கு கால­அ­வ­காசம் கொடுப்­பற்கு இணங்­குவோம். அது நியா­ய­மா­ன­தா­கவும் இருக்கும். அவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெ­றாத பட்­சத்தில் நாங்கள் வித்­தி­யா­ச­மாக செயற்­ப­ட­வேண்­டிய சூழ்­நிலை இயல்­பா­கவே ஏற்­படும். அதற்­காக நாங்கள் பின்­னிற்கப் போவ­தில்லை' என்று அவர் உறு­தி­யாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எனவே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மும்­மூர்த்­திகள் என கரு­தப்­ப­டு­கின்ற கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரா­கிய சுமந்­திரன் ஆகி­யோரின் வேறு­பட்ட கருத்­துக்கள், பிறக்­க­வுள்ள புதிய வரு­டத்தை சந்­தே­கத்­தோடு நோக்­கத்­தக்க வகை­யி­லேயே வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

கடந்த 2015 ஆம் ஆண்டின் இறு­தியில் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்று சில மாதங்­களே ஆகி­யி­ருந்த நிலை­யி­லேயே -நாடு 2016 ஆம் ஆண்டுப் பிறப்பை எதிர் நோக்­கி­யி­ருந்­தது. புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறுப்­பேற்று அப்­போது ஒரு வருடம் நிறை­வு­பெற இருந்­தது. மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் பதவி ஏற்­றி­ருந்த சூழல். அப்­போது, புதிய வரு­டத்தில் 2016 ஆம் ஆண்டு இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும். நிலை­மை­களைக் கவ­ன­மாகக் கையாள வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்­பட்­டி­ருந்­தது.

எதேச்­ச­தி­காரப் போக்­கிற்கு முடி­வு­கட்டி ஆட்­சியைக் கைப்­பற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யாக பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்பார். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி என்ற வகையில் துணி­வோடும் உறு­தி­யா­கவும் மேற்­கொள்வார் என்று யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள். ஆனால் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்க வில்லை. இருந்த போதிலும் 2015 ஆம் ஆண்டின் இறு­தியில் 2016 ஆம் ஆண்டை ஏமாற்றம் கலந்த எதிர்­பார்ப்­போடு வர­வேற்­றி­ருந்­தனர்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தார்கள். ஆனால் அந்தப் போராட்­டங்­க­ளுக்கு வெற்­றி­ய­ளிக்­கத்­தக்க வகையில் காரி­யங்கள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. புதிய அர­சாங்­கத்தில் தங்­க­ளுக்கு நன்­மைகள் ஏற்­படும். பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு பெரு­ம­ளவில் ஏமாற்­றத்­தி­லேயே முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யதன் மூலம் பல காரி­யங்­களை வெற்­றி­க­ர­மாகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நிறை­வேற்றும் என்ற எதிர்­பார்ப்பும் கானல் நீரா­கி­யி­ருக்­கின்­றது என்றே கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது. முறை­யான வழி­களில் செய்­தி­ருக்கக் கூடிய காரி­யங்­க­ளைக்­கூட புதிய அர­சாங்கம் செய்­ய­வில்லை என யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளிடம் கவலை வெளி­யிட்­ட­போது, அவர்­களை பொறுமை காக்­கும்­ப­டியும் நிலை­மை­களைக் குழப்­பி­வி­டு­கின்ற வகை­யி­லான காரி­யங்­களை முன்­னெ­டுக்கக் கூடாது என்றும் ஆறுதல் கூறி தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை பொறுமை காக்க வேண்டும் என்று கோரி­யி­ருந்­தது.

ஆயினும் 2016 ஆம் ஆண்டு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்த அல்­லது தனது நம்­பிக்­கையை கணிப்பை வெளி­யிட்­டி­ருந்த தலைவர் இரா.சம்­பந்தன் ஒரு வருடம் கழிந்த நிலை­யிலும், அதே கோரிக்­கை­யைத்தான் முன்­வைத்­துள்ளார்.

அதே­வேளை இலவு காத்த கிளியைப் போல தமது எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வே­றாத நிலையில் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்ற மக்­களின் மன­வோட்­டத்தை, அந்த ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் மாவை சேனா­தி­ரா­ஜாவும், சுமந்­தி­ரனும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய மன உணர்­வு­களை இவர்கள் இரு­வரும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாகக் கரு­தி­னா­லும்­கூட, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஒரு வரு­ட­கால அர­சியல் செயற்­பாட்­டினால் அந்த மக்­க­ளுக்கு எற்­பட்­டுள்ள நன்மை என்ன, தொடர்ந்தும் அவர்கள் ஏமாற்­றப்­ப­ட­மாட்­டார்கள் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது. அந்தக் கேள்­விக்கு உரிய பதில் இல்­லாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் அடுத்து என்ன செய்யப் போகின்­றீர்கள்? தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் வகையில், தன்­ன­ளவில் குழப்­ப­மான ஒரு நிலையில் உள்ள அர­சாங்­கத்தை எந்த வகையில் கையாளப் போகின்­றீர்கள் என்ற கேள்­வி­களும் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றன.

நாட்டின் பிர­தான கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்­சியை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களில் பொது எதி­ரணி என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ர­வா­ளர்கள் மிகத் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி முறை­மையை மாற்றப் போவ­தில்லை. பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை நிலை­யிலும் மாற்­றங்கள் செய்யப் போவ­தில்லை என்ற பற்­று­று­தி­யோடு செயற்­பட்­டுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் ஊடாக நாட்டைப் பிள­வு­ப­டுத்தப் போகின்­றது. தமிழ் மக்­க­ளுக்கு சிங்­கள மக்­களின் உரி­மைகள் உரித்­துக்­களை தாரை வார்த்துக் கொடுக்கப் போகின்­றது, இதனால் சிங்­கள மக்­க­ளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்­படப் போகின்­றது என்று தீவிரப் பிர­சா­ரத்தை இந்த எதி­ர­ணி­யினர் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள்.

அது மட்­டு­மல்ல. அர­சாங்­கத்தை பல­மி­ழக்கச் செய்யப் போவ­தா­கவும் அவர்கள் சூளு­ரைத்துச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இதனால் மிகத் தீவி­ர­மான உள்­வீட்டு அர­சியல் குழப்­பத்தில் சிக்­கி­யுள்ள நல்­லாட்சி அர­சாங்கம், தனக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்கிச் செயற்­பட்டு வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் எச்­ச­ரிக்­கை­யையும் காலக்­கெ­டு­வையும் எந்த அள­வுக்குக் கவ­னத்தில் எடுத்துச் செயற்­படப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அக்­க­றையை முதன்­மைப்­ப­டுத்தி, உள்­வீட்டு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கத் தரப்பினர் புதிய வருடத்தில் துரிதமாகக் காரியங்களை முன்னெடுப்பார்களா என்று எதிர்பார்க்க முடியாது. இருவேறு கட்சிகளைச் சார்ந்தவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் அவர்கள் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் அடிமடியில் கைவைக்கும் வகையில், பொது எதிரணியிடமிருந்து கிளம்பியுள்ள எதிர்ப்பைச் சமாளித்து அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

நெருக்கடியான ஓர் அரசியல் சூழலுக்குள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்ற அரசியல் ரீதியான அனுதாபம் இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்களிடம் அதற்கான செயலாற்றலுடன் கூடிய விருப்பு இருக்கும் என்றும், அந்த அனுதாபத்துக்கு அமைவாக அவர்கள் காரியங்களை முன்னெடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.

தங்களுடைய இருப்பைக் காத்துக்கொள்வதற்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள், யுத்தம் முடிவடைந்து சுமார் எட்டு வருடங்களாகப் புரையோடிப் போயுள்ள நிறைவேற்றியிருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு மிகவும்

குறுகியதொரு காலப்பகுதிக்குள் தீர்வு காண்பார்கள் என்று கூறமுடியாது. அவ்வாறு அவர்கள் செயற்படு வார்கள் என்று எதிர்பார்த்திருக்கவும் முடியாது. மொத்தத் தில் பல்வேறு நிலைகளில் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலித்துள்ள 2016 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் குழப்பகரமான ஓர் அரசியல் சூழலிலேயே மக்கள் புதிய ஆண்டாகிய 2017 ஆம் ஆண்டை வரவேற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் நம்பிக் கையை அடித்தளமாகக் கொண்டே மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, இந்த அடிப்படை யில், நன்மைகள் நிகழும் என்ற எதிர்பார்ப்பை வெளிப் படுத்தாவிட்டாலும், நிலைமைகளை மிகவும் மோசமாக்க மாட்டாது என்ற எதிர்பார்ப்புடன் புதியவருடத்தை எதிர் கொள்வதே நல்லது

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்