வவுனியா இராசேந்திரங்குளத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றம்
வவுனியா - இராசேந்திரன்குளம் - விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்றைய தினம் குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுமார் 18 வருடங்களாக குறித்த பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் யுத்த காலத்தில் பல தமிழர்கள் காணாமல் போனதாக காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்த மெக்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்களினால் கடந்த காலங்களில் முறைப்பாடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், இராணுவ முகாமைச் சூழ அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகள் மற்றும் இராணுவத்தின் கட்டடங்கள், தளபாடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு குறித்த இராணுவத்தினர் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொதுமக்களின் காணி என்பது குறிப்பிடத்தக்கது.