ஊடகவியலாளரை தாக்கிய கடற்படைத் தளபதிக்கு நேரில் நன்றி கூறிய ரணில்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற
போராட்டத்தின்போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவால், ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதுடன் மனிதஉரிமை அமைப்புக்களும் கண்டனம் வெளியிட்டிருந்தோடு பல்வேறு தரப்பினரும், கடற்படைத் தளபதிக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. கடற்படைத் தளபதியிடம் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிமரசிங்க, அசௌகரிய நிலையிலும் கப்பலை பாதுகாக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்காக நாம் கடற்படைத் தளபதிக்கும், கடற்படையினருக்கும் நன்றி தெரிவிப்போம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்