பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி கூச்சலிடும் சுமனரத்ன தேரர்
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்தால் அந்த பிரதேசத்தில் உள்ள சிங்கள இளைஞர்களுடன் இணைந்து மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பொலிஸாரினால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி நின்று கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.
எனினும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான பொலிஸாரும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்தவாறு நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது
பொலிஸாரினால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி நிற்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூச்சலிட்டவாறு இனவாத கருத்துக்களையும் கூறுவதாக தெரியவந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றதுடன், பொலிஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.








