Breaking News

அதிகார வரம்புகளை மீறி ஆளுநர் செயற்படுகிறார் - ரவிகரன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அண்மைக்காலமாக தனது அதிகார வரம்புகளை மீறி நிர்வாக நடவடிக்கைகளில் தலையி ட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


கடந்த 09ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆளுநரால் நடத்தப்பட்ட காணிப்பிணக்குகள் மீதான விசாரணையானது ஒருதலைப்பட்சமாக நடைபெற்றிருப்பது பாதிக்கப்பட்ட தரப்பினரின் அடிப்படை மனித  உரிமைகளை மீறும் செயல் என தெரிவித்ததோடு கட்டப்பஞ்சாயத்துக்கு ஒப்பான விசாரணைகளை மேற்கொண்டு முடிவுகளை வழங்கி பொதுமக்களின் காணி உரிமைப்பி ணக்குகளுடன் விளையாடும் ஒருவர் எமது வடமாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது எமது துர்ப்பேறு எனவும் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அண்மைக்காலமாக தனது அதிகார வரம்புகளை மீறி எதேச்சை அதிகாரமாக நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டுவருகிறார்.  இதன் இன்னொருபகுதியாகவே கடந்த 09.12.2016ஆம் நாளன்று மாலை 4.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் இவரால் பொதுமக்களின் காணிப்பிணக்குகள் விசாரணை செய்யப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன. இதற்காக இவரால் சிபார்சு செய்யப்பட்ட பதினாறு பிணக்குகள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இவ்விசாரணைகளின் போது குறித்த காணிப்பிணக்குகள் தொடர்பாக ஆளுநரிடம் முறையிட்ட பகுதியினர் மட்டுமே அழைக்கப் பட்டு எதிர்த்தரப்பினர் அழைக்கப்படாத நிலையில் ஒரு தலைப்பட்சமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானதாக உள்ளதுடன் வேதனை தருவதாகவும் அமைகின்றது. 

இயற்கைநீதி என்பது பிணக்கிற்குட்படும் இருபகுதியினரையும் அழைத்து வெளிப்படையாக நீதிநெறிகளின்பால் விசாரணைகளை மேற்கொள்வதாகும். இதைக்கூட பின் பற்றாது ஒருதலைப்பட்சமாக கட்டப்பஞ்சாயத்துக்கு ஒப்பான விசாரணைகளை மேற்கொண்டு முடிவுகளை வழங்கி பொதுமக்களின் காணி உரிமைப்பிரச்சினைகளுடன் விளையாடும் ஒருவர் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது எமது துர்ப்பேறே.

இவ்வாறு ஒருதலைப்பட்சமான விசாரணைகளை மேற்கொள்வது பாதிக்கப்பட்ட தரப்பினரின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் வடக்கு மாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் இரண்டு வருடங்களில் தீர்க்கப் படவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைய காணி அமைச்சினால் 2013/01 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சுற்றுநிருபத்தின்படி பிரதேச செயலாளர் ஒருவரால் தீர்த்துவைக்கப்படமுடியாத காணி ப்பிணக்குகள் காணி ஆணையாளர் நாயகம், காணி அமைச்சின் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகளால் நடத்தப்படும் நடமாடும் சேவை ஒன்றின் மூலம் தீர்த்துவைக்கப்படும்.

காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம், அரச காணிச்சட்டம் போன்ற அரசகாணிகளின் நிர்வாகம் தொடர்பான சட்டங்களை நன்கறி ந்த அதிகாரிகளால் 2013/01 சுற்று நிருபப்படி நடமாடும் சேவையில் தீர்வுவழங்கப்பட்ட பிணக்குகள் ஆளுநரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடமாடும் சேவையில் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு முரணான தீர்மானங்கள் வழங்கப்பட்டிருப்பது நாட்டின் சட்டம் ஒழுங்கு பேணப்படுவதை கேள்விக் குறியாக்கி இருப்பதுடன் அரச நிர்வாகத்தை கேலிக் கூத்தாக்கி உள்ளது. இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் எவரும் பொதுமக்களின் காணி ப்பிணக்குகளை கையிலெடுத்து சட்டத்திற்கு முரணாக நடத்தி தீர்ப்புகளை வழங்கவில்லை. 

நல்லாட்சி என்று அடையாளப்படுத்தப்படும் இந்த அரசும் இது தொடர்பில் போதிய கவனம் எடுத்து சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்ட இத்தீர்ப்புகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வடமாகாணத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் இனியாவது வட மாகாண ஆளுநர் எதேச்சை அதிகாரத்து டன் தலையிட்டு குழப்பங்களை விளைவிக்காது இருக்கவேண்டும் எனவும் ரவிகரன் தனது கருத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.