Breaking News

மனதை நெகிழ வைத்த யாழ். மக்களின் மனிதாபிமான செயல்



கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற நிலையில் 11 பேர் உயிரிழந்தனர்.

வேன் ஒன்றும் அரச பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் தென் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பெருன்பான்மையின மக்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் 11 மெழுகுவர்தி ஏற்றி மலர் தூவி பொது மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வழித்தட பயணிகள் சிற்றூர்தி உரிமையாளர்களின், வரையறுக்கப்பட்ட நிறுவன ஊழியர்களினால் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.