Breaking News

வடக்கின் சூழலை அரசியலுக்காக விமர்சிக்கின்றனர் – பாதுகாப்புச் செயலாளர்



வடக்கில் உள்ள சூழலை சிலர் தமது அரசியலுக்காக விமர்சிப்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீரைப் போன்றது என தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை கேலிக்குட்படுத்த கூடாது என சுட்டிக்காட்டிய அவர் தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது என தெரிவித்தார்.

மேலும் வடக்கின் சூழலோ அல்லது அரசியல் கருத்துக்களோ தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் தெற்கில் உள்ள சில அரசியல்வாதிகளால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் உள்ளதாக விமர்சிக்கப்படுவது குறித்து வினவியபோதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.