சிறீதரன் எம்பி மீது ஜ.போராளிகள் கட்சி பாய்ச்சல்(காணொளி)
தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப்
புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் அமைப்பினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அரசியல்ரீதியாக வட-கிழக்கு தாயகத்தில் நிலைகொள்ளக்கூடாது என்பதற்காக இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிடப்பட்ட முறையிலே சிறிதரன் பயிற்றுவிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருவதாகவும் புலிகள் அரசியல்ரீதியாக நிலைகொள்வதை கூட்டமைப்பினர் விரும்பியிருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பினை ஜனநாயகப் போராளிகள் அமைப்பினர் யாழ் ஊடக அமையத்தில் மேற்கொண்டிருந்தனர். அங்கு கருத்துரைத்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் 2009 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் சயனற் அடித்து இறந்துவிட்டார்கள் தற்போது எஞ்சியிருப்பவர்கள் இராணுவ புலனாய்வாளர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்மீது தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவருகின்றார்.
நான் இங்கு பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் ஒரு விடையத்தைக் கூறுகின்றேன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அரசியல்ரீதியாக வட-கிழக்கு தாகயத்தில் நிலைகொள்ளக்கூடாது என்பதற்காக இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிடப்பட்ட முறையிலே சிறிதரன் பயிற்றுவிக்கப்பட்டு இதுபோன்ற கருத்துக்களை பரப்பிவருகின்றார்.
கிட்டு அண்ணாவினதும், பாலா அண்ணாவினதும் திலீபன் அண்ணாவினதும் தியாகங்களைப் பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கவேண்டிய நேரத்தில் சுமந்திரன் பற்றியும் கையைக் காட்டிக்கொண்டிருக்கும் சிறிதரன் பற்றியும் கதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுதான் எங்களுடைய அரசியல் வெறுமை. நாங்கள் அனைவரும் செத்துவிடவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமை இறுதி யுத்தத்திலும் எந்தத் தளர்வையும் சந்திக்கவில்லை.
அங்கு கட்டளைகள் தெளிவாக இருந்தது. ஆனந்தபுரம் களச் சமர் என்பது புலிகளின் இராணுவபலத்தை அழித்தது. எனினும் எங்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாத அரசியலாகிவிட்ட நிலையில் அதனை உடைத்தெறிய வேண்டிய தேவை எழுகிறது. இதற்காககத்தான் நடேசன் புலித்தேவன் போன்றோர் இன்னொரு அரசியல் அத்தியாயத்திற்காக உருவாக்கப்படுகின்றார்கள். அந்த அணியும் அழிக்கப்பட்டுவிட்டது. தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள்.

சம்பந்தனுக்கு முன்னாள் போராளிகள் இறுதி எச்சரிக்கை-(காணொளி)
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்