Breaking News

ஈழத்திற்கான அனைத்து அம்சங்களும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கம்!



தமி­ழீ­ழத்­துக்­கான அனைத்து அம்­சங்­களும் அடங்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பை எதிர்ப்போம் என அறை­கூவல் விடுக்கும் பொது­ப­ல­சேனா அமைப்பு, இந்­தி­யாவின் தேவைக்­காக பலாலி விமான நிலையம் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­றப்­ப­ட­வுள்­ளது என்றும் குற்றம் சாட்­டி­யது. 

கொழும்பு, கிரு­லப்­பனை பொது­ப­ல­சேனா தலை­மை­ய­லு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் செயலாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தேரர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

இன்­றைய அர­சாங்கம் கொண்டு வர­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் தனித் தமி­ழீ­ழத்­துக்­கான அனைத்து அம்­சங்­களும் அடங்­கி­யி­ருக்­கின்­றன. எனவே இதனை முழு­மை­யாக எதிர்க்­கின்றோம். புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு நாட்­டுக்குள் இட­மில்லை. அது வந்தால் நாடு பிரியும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு வித்­தையைக் காட்டி அர­சாங்கம் நாட்­டி­லுள்ள அரச வளங்கள் அனைத்­தையும் விற்­பனை செய்யும் போக்கில் ஈடு­பட்­டுள்­ளது. அதற்­கா­கவும் அதனை மறைப்­ப­தற்­கா­கவும் அர­சி­ய­ல­மைப்பை காட்­டு­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும் அதனை அண்­டிய 15000 ஏக்கர் காணி­யையும் சீனா­வுக்கு விற்­பனை செய்­ய­வுள்­ளது.

கொழும்பு துறை­மு­கத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­ய­வுள்­ளது. அதே­வேளை இந்­தி­யாவின் தேவையை நிறை­வேற்­று­வ­தற்­காக பலாலி விமா­னத்­த­ளத்தை சர்­வ­தேச விமானத் தள­மாக மாற்றும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அமெ­ரிக்­காவின் யுத்தக் கப்­ப­லொன்று திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் தரித்து நிற்­கின்­றது. இவ்­வாறு முழு நாட்­டையும் வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்க்­கவும் அரச வளங்­களை விற்றுத் தீர்க்­கவும் அர­சாங்கம் அனைத்து முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

இதனை மூடி­ம­றைப்­ப­தற்­காக அர­சி­ய­ல­மைப்பைக் காட்டி நாட்டு மக்­களை திசை திருப்பி ஏமாற்­று­கின்­றது. எனவே அரசின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக இன, மத வேறு­பா­டு­களை மறந்து நாம­னை­வரும் ஒன்­று­பட வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பட்டால் அது நாட்டைப் பிரிக்கும். எனவே பொது­ப­ல­சேனா இதனை முழு­மை­யாக எதிர்க்­கி­றது. இந்த தேசத்தை நேசிக்கும் தேசப்­பற்­றுள்­ள­வர்­கள்­அ­னை­வரும் அர­சி­ய­ல­மைப்பை எதிர்க்க வேண்டும். இதற்­காக பொது­ப­ல­சேனா எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக அடக்­கு­முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள். கடற்­படைத் தள­பதி சண்­டி­யரைப் போல் செயற்­ப­டு­கிறார்.

கடந்த ஆட்­சியில் இவ்­வாறு நடந்திருந்தால் உடனடியாக பாதுகாப்பு செயலாளர் மீது ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருக்கும். ஆனால் இன்று ஊடகங்கள் அமைதி காக்கின்றன என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பொதுபல சேனாவின் நிர்வாக இயக்குநர் கலாநிதி டிலாந்த விதானகேயும் கலந்து கொண்டார்.