Breaking News

கண்டியில் பௌத்த பிக்குணி சாகும்வரை உண்ணாவிரதம்



சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க முனைவதாக கூறி, கண்டியில் தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்றுக்காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவும், புதிய அரசியலமைப்புக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.