Breaking News

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கு எந்த நிபந்தனையும் இல்லை!



ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை எந்த நிபந்தனைகளினதும் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை, சிறிலங்கா இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளும்.

இதன் மூலம், சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 11 வீத வரிச்சலுகை கிடைக்கும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடனேயே சிறிலங்காவுக்கு ஜி.எஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.