தமிழகத்திற்காக கிளிநொச்சியும் கவனயீர்ப்பில் இறங்குகிறது
தமிழகத்தில் பெரும் எழுச்சி கொண்டுள்ள ஜல்லிக் கட்டு தடை நீக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் தெரிவித்துள்ளது.
19.01.2017 இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஏறுதழுவுதல் எம் உரிமை என்ற தொனிப் பொருளில் கலாசார உரிமைக்காக காளையாய் வெகுண்டெழுந்திருக்கும் தாய்த் தமிழகத்திற்காக ஈழத் தமிழர்கள் நாம் குரல் கொடுப்போம் என்றும் கல்வி கலாசார அமையம் அழைப்பு விடுத்துள்ளது.