இலங்கையை வதைக்கிறது வரட்சி :வடக்கில் மட்டும் 43 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு
ஸ்ரீலங்காவில் அனைத்துப் பாகங்களிலும் நிலவிவரும் வரட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வரட்சி காலநிலை காரணமாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 329 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 6 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் 43 ஆயிரத்து 510 குடும்பங்களைச் சேர்ந்த 14 இலட்சத்து 9 ஆயிரத்து 162 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 162 குடும்பங்களைச் சேர்ந்த 93 ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 348 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் 60 ஆயிரத்து 401 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 2005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தவிர களுத்துறை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 847 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 381 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 647 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.