கடும் மழைக்கு மத்தியில் மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களை சேர்ந்தோர் வவுனியா ஏ 9 வீதியில் பிராதான தபாலகத்திற்கு முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் காலவறையற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பேரணியாக சென்ற மக்கள் வவுனியா ஏ 9 வீதியிலுள்ள தபாலகத்திற்கு முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நேற்றையதினம் ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை கடும் மழை மத்தியிலும் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.