இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் - THAMILKINGDOM இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

  இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 


  இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், மனித உரிமைகள் ஆணையருக்கும் வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

  அதில், இலங்கையில் தமிழர் படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியிருப்புகள், இராணுவ கட்டுமானங்கள் அகற்றப்படவேண்டும். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

  அந்தக் கடிதத்துடன், தமிழக சட்டப்பேரவையில் 2012 மார்ச் 27ம் திகதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல், இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கான அத்தாட்சி ஆகியவற்றை இணைத்து அனுப்பியிருப்பதாக மதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top