காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா? அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா? - THAMILKINGDOM காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா? அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா? - THAMILKINGDOM
 • Latest News

  காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா? அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா?  காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா ? வன்னி .எம் பி நிர்மலநாதன் கேள்ளி?

  பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் காணாமல் போனவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் அல்லது அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவித்த ஊடகம் ஒன்றுவினாவியபோதே காணாமல் போனவர்களை பிரதமர் அவர்களே நீங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினிர்களா அல்லது நீங்கள் அவர்களை சுட்டு கொன்றுவிட்டீர்களா ? என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாளஸ் நிர்மலநாதன் கேள்ளி எழுப்பியுள்ளார்.

  மட்டக்களப்பு – படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிவளாகத்தில் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படது இதில் கலந்துகொண்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாளஸ் நிர்மலநாதன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செய்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்
  கொக்கட்டிச்சோலை படுகொலை தொடக்கம் ஒவ்வொரு படுகொலையும் சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு இந்த தீவில் இருந்து தமிழர்களை அழிக்கவேண்டும் என்று இடம்பெற்ற படுகொலைகள் ஆனால் எங்கள் உறவுகள் அழிக்கப்பட்டது அவர்களால் தமிழை அழிக்கமுடிந்ததா? இல்லை அவர்கள் அழிக்க அழிக்க நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம்.

  இன்று இலங்கைதீவில் தமிழர்களுடைய போராட்டம் இந்திய தொடக்கம் அமெரிக்கா வரை உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்து போராடக் கூடிய வல்லமை பொருந்திய இனமாக வளர்ந்து நிற்கின்றது எனவே இந்த படுகொலைகள் எங்கள் இனத்தின் வரலாறு, எனவே தமிழனின் உயிர் இருக்கும் வரை வடகிழக்கு இணைந்த தீர்வை பெற்றெடுப்போம் அதற்காக அரசியல் ரீதியாகவோ அல்லது அகிம்சை ரீதியாகவோ போராடுவோம்.

  இந்த படுகொலைக்கு அப்பால் முள்ளிவாய்கால் இன படுகொலைசெய்த இராணுவத்தை இலங்கை அரசு விசாரணை செய்து தண்டனை கொடுக்க முடியுமா? இந்த நூற்றக்கனக்காக மக்களை படுகொலை செய்ததை விசாரணை செய்யாத அரசு ஒரு இலட்சத்திற்கு மேலான மக்களை குறித்த நாட்களில் கொன்று குவித்த இந்த அரசும் இராணுவம் எப்படி நீதிமன்றங்களில் விவாரணை செய்யம் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்களா? இல்லை எனவே இந்த எல்லா படுகொலைகளுக்கும் சர்வதேச விசாரணவேண்டும்

  அதேவேளை 2005 தொடக்கம் 2010 வரை அதிக எண்ணிக்கையான இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் அதில் வெள்ளைவான் கடத்தல் உப்பட பலர் வீதிகளில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அதற்க மேலாக முள்ளிவாய்காலில் இருந்து வவுனியா செட்டிக்குளம் மெனிக் பாம் அகதிகள் முகாமில் பாதுகாப்பு படையினரின் கட்டளையின் பிரகாரம் விடுதலைப்புலிகள் அதற்கு ஆதரவு அளித்தவர்கள் வேறாக வருமாறு அழைக்கப்பட்டபோது அவர்களை அவர்களது பெற்றோர்கள், மற்றும் மனைவி மார்களால் நூற்றக்கணக்கான பிள்ளைகள் கணவர்களை நேரடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர் ஆதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது

  ;தமிழர்களுடைய ஆதரவுடன் வந்த இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய மனங்களில் விசமத்தனமாகவும் எங்களுடைய மக்களை கேவலமாக நடாத்துகின்ற விதமாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது காணாமல் போனோர் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்

  எனவே நேரடியாக இராணவத்தினரிடம் கையளித்தவர்களுக்கு பிரதம் அவர்களே என்னபதில் செல்லப்போகிறீர்கள், நீங்கள் சட்டவிரேதமா வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்களா அல்லது நீங்கள் அவர்களை சுட்டு கொன்றுவிட்டீர்களா ? என கேட்கின்றேன் அதேவேளை ஒரு நாட்டின் உடைய பிரதமர் சகலமக்களின் இறமையை மதித்து நடக்கவேண்டும் ஆனால் இந்த பிரதமரின் உரையானது தமிழ் மக்களுடைய மனங்களில் நீங்கா வடுவை சுமந்து நிற்கின்றது. இந்த பிரதமரின் உரை மிகவும் கண்டிக்கத்தக்கது

  நாங்கள் மகிந்த அரசை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரசாங்கத்திற்க ஆதரவு அளித்தோம் இந்த நல்லாட்சி அரசாங்கம் இரண்டுவருடங்களில் செய்தது அரசியல் கைதிகளை விடுவதாக பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்து மட்டும் தான் அதேவேளை பாராளுமன்றத்தில் சபையில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதனிடம் நான் கேள்வி கேட்டபோது அவர் 23 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை விடுதலை செய்வதாக உறுதியளித்து ஆறு மாதம் முடிந்துவிட்டது அவர்களுக்கு இன்னம் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை.

  2015 ம் ஆண்டு வடக்கில் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பொது மக்களின் காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது இந்த காணிகளில் இந்த இரண்ட வருடத்தில் 2 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மிகுதி 63 ஆயிரம் எக்கர் காணிகள் எப்போ விடுவிப்பார்கள் 63 வருடத்திலா? எனவே இந்த அரசு சிந்தித்து செயற்படவேண்டும்

  இந்த கொக்கட்டிச்சோலை படுகொலையை சர்வதேசத்திற்கு கொண்டுசென்றவர் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான யோசப்பரராயசிங்கம் அவர்களை அரசாங்கம் திட்டமிட்டு படுகொலை செய்தது. அது மட்டுமல்ல பாராளுமன்ற உறப்பினர் ரவிராஜ் கூட நடு வீதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது யார் என எல்லாம் தெரிந்தும் அவரை குற்றவாளி அல்ல என்றது இந்த அரசாங்கம். தமிழர்களுக்கு கௌரவமான தீர்வை வழங்கவேண்டும், அல்லது இந்த அரசாங்கத்தை கடந்த மகிந்த அரசாங்கத்தை போல விரட்டி அடிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் போராடுவோம் என்றார்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா? அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா? Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top