Breaking News

ஐ.தே.க.யுடன் இருக்கும் வரை மைத்திரியுடன் இணைய முடியாது- மஹிந்த



இந்த அரசாங்கம் இருக்கும் வரையில் எமக்கு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதை நாம் தெளிவாக ஆறு முதலமைச்சர்களுக்கும் எடுத்துக் கூறினோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முதலமைச்சர்களுடனான சந்திப்பு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்ப கட்ட செயற்பாடாக கருதப்பட முடியுமா? என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இதனைக் கூறினார்.

அரசாங்க தரப்பு முதலமைச்சர்கள் இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவது சாத்தியமானது எனவும், அதற்கான ஓர் சிறந்த ஆரம்பமாக கடந்த சந்திப்பு காணப்பட்டதாகவும் கூறிவரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இதற்கெல்லாம் ஆப்பு வைத்தாற்போல் நேற்று இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.